Login User : SignOut
மேலத்திருப்பந்துருத்தி.காம் முதலாம் ஆண்டு
நிறைவு விழா

முகப்பு | நமதூர் நிகழ்வுகள் | உங்கள் கருத்து / ஆலோசனைகள்
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றேன்.

   அஸ்ஸலாமு அழைக்கும் [வரஹ்] , மேலத்திருப்பந்துருத்தி இணையத்தளம் 10/02/2011 அன்று அல்லாஹ்வின் உதவியால் துவங்கப்பட்டது , அன்று முதல் தாங்கள் அளித்த பேராதரவினால் நமது இணையதளம் இன்று பல பரிமாணங்கள் கண்டு திகழ்கிறது. உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

பிப்ரவரி 10 2011 அன்று முதல் பிப்ரவரி 10 2012 வரை நமதூரில் நிகழ்ந்த நிகழ்வுகளின் தொகுப்பு உங்களுக்காக.


பிப்ரவரி 17 2011
மேலப் பள்ளிவாசல் விரிவாக்க கட்டிட திறப்பு விழா முன் தினம் மாலை நேர சிறப்பு நிகழ்ச்சிகள்.
பிப்ரவரி 18 2011
மேலப் பள்ளிவாசல் விரிவாக்க கட்டிட திறப்பு விழா.

பிப்ரவரி 27 2011
போலியோ சொட்டு மருந்து நமதூர் மேலபள்ளிமதர்சாவிலும்,பெரியபள்ளிமதர்சாவிலும் போடப்பட்டது.
மார்ச் 2 2011
பிளஸ்டூ பொதுத் தேர்வுகள் தொடங்கின . நமதூரிலிருந்து சுமார் 19 மாணவர்களும் 10 மாணவிகளும் இத்தேர்வை எழுதினர்.

மார்ச் 7 2011
பெரிய பள்ளிவாசல் புதிய ஜமாஅத் அலுவலகம் மற்றும் ஹவூஜ் திறப்பு விழா.
மார்ச் 10 2011
நமதூரை அடுத்து அமைந்துள்ள நடுக்காவேரி மகாத்மா பள்ளியில் அன்று பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் நமதூரை சேர்ந்த மாணவ மாணவிகள் அதிகமான பரிசுகளை பெற்று நமதூருக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

மார்ச் 18 2011
ஆண்கள் ஜும்மா நாளில் பள்ளியில் இமாமின் பயான்களை கேட்டு நற்பயன் அடைகிறார்கள்..பெண்களுக்கு அந்த வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்பதை கருத்தில் கொண்டு மாலை 3 மணி முதல் 4 மணி வரை மேல மதற்சாவில் பெண்களுக்கான சிறப்பு பயான் நடைபெற்றது.
மார்ச் 25 2011
crescent nursery and primary school இன் 22 ஆம் ஆண்டு விழா

மார்ச் 27 2011
மேலப்பள்ளி மதரசாவில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு என்ன படிக்கலாம் என்பது பற்றி கவுன்சிலிங்க் நடைபெற்றது.
ஏப்ரல் 20 2011
கோடை விடுமுறையில் பெண்களுக்கான மார்க்க கல்வி வகுப்புகள் பெரிய பள்ளிவாசலில் நமதூர் ஜமாஅத் சார்பாக நடைபெற்றது.

ஏப்ரல் 21 2011
நமதூர் உமர் தெரு BSNL EXCHANGE அருகில் தீ விபத்து நேர்ந்தது.
மே 1 2011
E.B பில் இப்போது நம்ம ஊரில் உள்ள போஸ்ட் ஆபீசில் கட்டும் புதிய வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு முன் திருவையாறு சென்று கட்ட வேண்டி இருந்தது.. இந்த வசதி நமதூர் மக்களிடம் பெரும் வரவேற்ப்பை ஏற்படுத்தியது.

மே 10 2011
12 ஆம் வகுப்பில் 750 க்கு மேல் மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு திருச்சி M.I.E.T கல்லூரி சார்பாக பரிசு தொகை வழங்கப்பட்டது.
மே 21 2011
நமதூரில் அல் பத்ரிய்யா நற்பணி மன்றம் நடத்தும் இரண்டாம் ஆண்டு தொடர் பயான் 21/5/2011 முதல் 30/5/2011 வரை இரவு 9 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது..

மே 30 2011
5 ம் வகுப்பு மேல்படிக்கும் மாணவ மாணவியர்களுக்கான கோடைக்காள ஸ்பெசல் கிளாஸ் மார்க்கத்தை பற்றி தொடர்ந்து காலை 9.00 மனிமுதல் மதியம் 12.00 மனிவரை நடைபெற்று வந்தது. அதிகமாக 130 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்குபெற்று பயன் அடைந்தனர். அதனை தொடர்ந்து தேர்வும் நடைபெற்று அதில் 70 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தேர்வு எழுதி தேர்வு எழுதிய அனைத்து மாணவ மாணவியருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
ஜூன் 4 2011
படேஷா மு .பீர் முஹமது பெஸ்ட் டிராவல்ஸ் இன்று திறப்பு விழா

ஜூன் 17 2011
நாமக்கல் அருகே நடந்த சாலை விபத்தில், தஞ்சை மாவட்டம் கீழ திருப்பூந்துருத்தியை சேர்ந்த 12 பேர் இறந்தனர். அவர்களின் உடலை குடமுருட்டி ஆற்றை கடந்து, சுடுகாட்டுக்கு தூக்கி செல்லும் உறவினர்கள்.
ஜூன் 17 2011
முகம்மது பந்தர் மேட்டு தெரு அப்துல்லாஹ் அவர்களின் மகன் அப்துல் ரஹ்மான் வயது (சுமார் எட்டு) கல்லணை நீர் தேக்கத்தில் விழுந்து மரணம் அடைந்து விட்டார். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

ஆகஸ்ட் 2 2011
புனித ரமலான் மாதம் ஆரம்பம்.
ஆகஸ்ட் 27 2011
புனிதமிக்க லைலத்துல் கத்ர்.

செப்டம்பர் 1 2011
ஈத் பெருநாள்
செப்டம்பர் 25 2011
பெரிய பள்ளிவாசல் மதரசாவின் 100 வது ஆண்டுவிழா மற்றும் மாணவர்களுக்கு பரிசளிப்பு சிறப்பு பயான்.
அக்டோபர் 14 2011
நமது சுற்று வட்டாரத்தில் (திருப்பந்துருத்தி, முஹமது பந்தர், நடுக்கடை, கண்டியூர் ) ஒரு மார்க்க கல்வியுடன் கூடிய இஸ்லாமிய மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆரம்பிப்பது சம்மந்தமாக கருத்தரங்கம் 14/10/2011 வெள்ளி அன்று மாலை 08:30க்கு துபை தமிழ் ரெஸ்டாரண்ட் மேல்தளத்தில் நடைபெற்றது.
அக்டோபர் 21 2011
நமதூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நமது ஜமாத் தலைவர் ஜனாப் தவக்கல் பாட்சா அவர்கள் வெற்றி பெற்றார்.
நவம்பர் 7 2011
ஹஜ் பெருநாள்.
நவம்பர் 7 2011
ஈத் பெருநாள் சந்திப்பு மற்றும் கல்வி விழிப்புணர்வு கூட்டம் ஸ்டார் இன்டெர் நேஷனல் ஸ்கூல் அரங்கத்தில் நடைபெற்றது.
டிசம்பர் 2 2011
கிரசென்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அடிக்கல் நாட்டுதல் விழா - மேலத்திருப்பூந்துருத்தி மேலப்பள்ளிவாசல் அருகில் உள்ள பாத்திமா நகரில் அதிராம்பட்டினம் அப்துல் காதர் ஆலிம்ஷா அவர்களின் துஆவுடன் அதிராம்பட்டினம் அப்துல்லத்தீப் ஆலிம்ஷா அவர்கள் அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றி விழாவை சிறப்பித்து வைத்தார்.
டிசம்பர் 12 2011
அல்லாஹ்வின் கிருபையால் புனிதமிக்க ஹஜ்ஜை நிறைவேற்றி ஊர்திரும்பிய ஹாஜிகள் அனைவரும் இன்று { 12 .12 .2011 } காலை 8 :00 மணியளவில் நமதூரை வந்தடைந்தார்கள் ஹாஜிகள் அனைவருக்கும் ஜமாஅத்தார்களும் பெரியோர்களும் சகோதரர்களும் திரளாக வந்திருந்து சிறப்பாக வரவேற்பளிக்கப்பட்டது.
டிசம்பர் 26 2011
பிரதமர் தமிழ்நாடு வருவதை கண்டித்து எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மேலத்திருப்பந்துருத்தி தேமுதிக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
ஜனவரி 9 2012
பூந்தையில் ஒரு மழைகாலம்.
safari
Jock Safari Lodge


© Copyright M.S TECHNOLOGY 2011. All rights reserved.   Contact : ahamedriyas.iqbal@gmail.com